குழந்தை ஒன்று
குழந்தை சுமக்கும்
அழகை
இரவெல்லாம்
பார்த்து
ரசிக்கிறேன்..

ஆசை...

உன்
முகத்தில் விழும்
ஒற்றை முடியாய்
பிறக்க ஆசை...
ஆயுள்
முழுதும்
உன்னை தரிசிக்க...

தென்றல்



புயலே
தென்றலாய்
வீசு
என்
ரோஜா
உறங்குகிறது....


தூங்கா இரவு..


மற்றுமொரு
 தூங்காத இரவு 
உன்னால்.....

சிற்பியாய்
உன்னை 
என்னுள் 
செதுக்கி
கொண்டிருக்கிறேன்
உன்னோடு
உறங்க...... 


காதல்


உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்
போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
உணர்கிறேன் உன்
காதலை... .

காதல் பரிசு


குழந்தையாய்
தவித்துக்
கிடக்கிறேன்....
காதல்
பரிசாய் கிடைக்கும்
உன்
ஒற்றை
முத்ததிற்காக...

கவிதைகள்

என் கவிதைகள்
உயிர் பெறுவது
உன்
இதழ்களால்
வாசிக்கப்பட்டதும்
தான்.

அழகு


இப்பொழுதெல்லாம்
அழகாய்
இருக்கிறேனாம்
என்னுள்
"நீ"
வந்ததாலோ ?

அர்த்தங்கள்


இன்னும் அர்த்தங்கள்
தேடிக் கொண்டிருக்கிறேன்
"அப்புறம்"
என்ற உன்
வார்த்தைக்கு மட்டும்......
இடைவெளி
குறைந்தது
நம்முள்
மட்டுமல்ல
நம்
குழந்தைகளின்
வயதும் தான்......,

வார்த்தைகள்
அற்ற
கவிதை
உன் மௌனம் .....,
உன் விழிப்
பார்வையில்
இழந்தது
என்னை
மட்டுமல்ல
என்
தூக்கத்தையும்
தான் .....,
இருந்தும்
இல்லாமல் இருப்பது
நம் காதல்
கவிதைகள் மீது.....
அட
என் பெயரும்
இனிமை தான்
உன்
பெயருக்கு பின்னால்
வரும்பொழுது.....,


மீண்டும் மீண்டும்
படையெடுத்தேன்
கஜினியை
குருவாக ஏற்று ..,
வெல்வேன் என்ற
கர்வத்தோடு ......,
உன் காதலுக்காக .....,

உண்மை பேசும்
உன்
கண்களை விட
பொய் பேசும்
உன்
உதடுகள் தான்
என்னை
கொல்லுதடி.....,

முதல்வரின் கவனத்திற்கு

முதல்வர் அவர்களுக்கு ,

தமிழக விவசாயிகளின் சார்பாக உங்களுக்கு ஒரு கடிதம் ....,

விவசாயி என்று சொன்னவுடன் அட இன்னுமா இருக்காங்க என்று எண்ணம் வரலாம் உங்களுக்கு., அப்படி இருக்கு உங்களுடைய திட்டங்களும் அதன் நடை முறைகளும்......

இன்னைக்கு இருக்கிற நிலைமையில வேலைக்கு ஆட்கள் கிடைக்கிற கஷ்டங்களை பார்க்கும் பொழுது உங்களுடைய நூறு நாள் வேலை திட்டத்தின் மூலமா அதிகம் பயன் பெறுவது விவசாயி மட்டுமே? இருந்த ஒன்னு இரண்டு ஆட்களையும் உங்களின் திட்டத்தின் மூலமா நூறு ருபாய் கூலி கொடுத்து நீங்க கூட்டிட்டு போய்டிங்க , அப்ப விவசாயின் நிலை நடைமுறையில் இருக்கிற கூலியை கொடுத்து ஆட்களை வேலைக்கு சேர்க்கணும். ஆனா விவசாய பொருட்களின் விலை மட்டும் ஏற்ற கூடாது? விலைவாசி எற்றமுனு சொல்லுவிங்க..... அப்ப எப்படி அவன் கூலி கொடுக்க முடியும் ? இன்னைக்கு சர்க்கரை விலை மட்டும் ஜிவ்வுன்னு ராக்கெட்டுல பறக்கும் பொது கரும்பு விலைய மட்டும் ஏத்த மாட்டிங்க ? ஆனா அரசாங்க ஊழியரின் படிகளை மட்டும் வருஷம் தவறாம கூட்டரிங்க? நாங்க ஒன்னும் அரசாங்க ஊழியருக்கு எதிரிகள் இல்லைங்க, நாங்க கேட்கறது ஒன்னே ஒன்னு தானுங்க, அவிக மேல காட்டுற அக்கறையில கொஞ்சமாவது எங்க மேலயும் காட்டுங்க? தினமும் காலையில பத்திரிகைய படிக்கும் பொழுது எதாவது ஒரு செய்தி விவசாயிக்கு ஆதரவா சொல்லுவிங்க பார்த்தா , அரசாங்க ஊழியரின் சம்பளம் மட்டும் உயர்த்தி அறிவிப்பிங்க, அதுக்கும் காரணம் விலை வாசி உயர்வுங்கரிங்க!!!!!!

இன்னும் சொல்லபோனா எல்லாமும் நன்மைக்கே , அடுத்த அஞ்சு வருசத்தில தினசரி தேவையான காய் கனிகளுக்கு பக்கத்துக்கு மாநிலங்களை நாட வேண்டி வரும், காரணம் விவசாய கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல் இப்படியே விவசாயி மேல உங்களுடைய பாசத்த காட்டினா நாங்களும் எங்களுடைய பொருளுக்கு நாங்களே விலையை நிர்ணயிக்கிற அளவுக்கு வந்துரும். அப்பவாவது விவசாயியை நினைபீங்கள?
இன்னும் ஆச்சரியம் உரங்களின் விலையேற்றத்திற்கு நீங்க ஏதும் இன்னும் அறிக்கை விடாம இருக்கிறது. என்ன விவசாயி உங்களை ஒன்னும் கேட்கிறது இல்லை , அவனுக்கு தினமும் காலைல இருந்து காட்டுல வேலை செய்யவே நேரம் இருக்கிறது இல்ல உங்களால. இன்னும் ஒரு சந்தேகம் அய்யா மத்தியில் அரசாலுற நீங்க பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு மறுப்பு சொல்றீங்கனா அப்ப அரசாள்வது யார்?ஏன் உரங்களின் விலை ஏற்றத்திற்கு மறுப்பு சொல்லவில்லை ? ரசாயன மந்திரியா உங்க பையன் இருக்கிரதனாலய?

கவிதைகள்



உன் கையில்
ஐஸ் கிரீமாக நான்
உருகுவதற்குள்
உறிஞ்சி கொள் .....

கவிதைகள்


இப்பொழுதுதான்

புரிந்தது

உன் மௌனத்தின்

காரணம்........

காதலின்

மொழி

மௌனம்

என்கிறார்கள்.....